Loadtr.Com

பெண்ணே! உனக்கு சம்மதமா?



போகப் பொருள் விளம்பரமா?
மோக அருள் விளைவிடமா?
கண்காட்சி மைதானமா?
காண்போர் சிதைக்கும்
காட்டுப் பூவினமா?

பெண்ணினமென்ன
மலிவடைந்த ஓரினமா?

மடமையுடைய நலிவினமா?
”பெண்ணே”
இதற்கு உனக்கு சம்மதமா?

 =========================

என்மன ஓசைகள்

அழகான கோபம் நீ



சட்டென இடி இடித்துவிட்டு
சல சலத்து குளிர் மழை பொழிவதுபோல்
அடிக்கடி எனை மிரட்டி
அழுகையோடு சிரிக்க வைக்கும்
அழகான கோபம் நீ,,,


என்மன ஓசைகள்

சவால்!



இளிந்தவன்
இறைவனை குற்றஞ்சொல்லுகிறான்
படைத்தவனையே
பழி சுமத்துகிறான்
எங்கே
குற்றமுறைப்பவனும்
பழி சுமத்துபவனும்
சிறு எறும்பையேனும்
சின்னஞ்சிறு புழுவையேனும்
படைத்துக் காட்டட்டும்.



என்மன ஓசைகள்