Loadtr.Com

நட்பின் உயிர்ப்பு..


5 comments:

KALAM SHAICK ABDUL KADER said...

பலம்குன்றி நிற்கும் பொழுதினி லெம்மை
நலம்பெற நாடுதல் நட்பு.

யாப்பிலக்கணம்: குறட்பா

உடைமாற்றிப் போட்டதையும்; உண்டதையும்; ஒற்றைக்
குடைக்குள்ளே ஓருடலாய்க் கொட்டும் மழையில்
நடைபயிற்சி செய்ததையும் நட்பால் இழைத்துத்
தடையின்றிப் பொழிகின்றத் தன்னிலைக் கூற்று
விடைபெற்று வந்த விநாடியும் போற்றும்
அடைபட்டுக் கிடக்கின்ற அன்பென்னும் வெள்ளம்
மடைதாண்டி வழிகின்ற மாசிலா நட்புள்ளம்
படைத்தோனே வழங்கும் பரிசு.


யாப்பிலக்கணம்: வெண்கலிப்பா


உன்பாலுள் ளன்பினா லுள்ளம் பதறுமே
உன்பா விலும்பிழை யுண்டென்றால் நண்பரே
தன்பால் வழங்கும் தகைசால் பரிசிலை
அன்பா யெனக்கே அளித்திட வேண்டினாய்
உன்போ லெவர்தான் உளர்.

யாப்பிலக்கணம்: பஃறொடை வெண்பா

பால கணேஷ் said...

கற்பினைப் போல் நட்பினைக் காத்து... பிரமிக்க வைத்த வரிகள். பிரமாதம்!

அன்புடன் மலிக்கா said...

வாங்க கலாம் காக்கா கவிக்கூடுக்கு தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
அருமையான கவிதை வழங்கியமைக்கும் பாராட்டுகள்.

அன்புடன் மலிக்கா said...

கணேஷ் said...

கற்பினைப் போல் நட்பினைக் காத்து... பிரமிக்க வைத்த வரிகள். பிரமாதம்!//

வாங்க கணேஷண்ணா.
மனக்கிளையிலிருந்து உதிராதபூ இந்த நட்பு.

தங்களின் வருகைக்கும் அன்புக்கு மிக்க நன்றி..

Unknown said...

அருமை
நீரோடை மகேஷ்..